காதல் தோல்வி குறித்து நடிகை லட்சுமி மேனன் உருக்கம்
சென்னை: தனது முதல் காதல் தோல்வி பற்றி உருக்கமாக கூறியுள்ளார் லட்சுமி மேனன். அவர் கூறியது: என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது.
ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேராக போய் லவ் சொல்லிட்டேன்.
சில நாட்கள் கழித்து அவரும் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது, அடிக்கடி அவுட்டிங் சென்றது இதுபோல எதுவும் நடக்கவில்லை. அவர் அவருடைய படிப்பில் கவனமாக இருந்தார். நான் என்னுடைய படிப்பில் கவனமாக இருந்தேன். நண்பர்கள் போலவே இருந்தோம்.
எப்போதாவது ஒருமுறைதான் பேசிக் கொள்வோம். பள்ளி காலம் முடியும் தருவாயில் தான் அடிக்கடி பேச தொடங்கினோம். தொலைபேசியில் பேச தொடங்கினோம். போர்வையை போர்த்திக் கொண்டு அவருடன் நான் ரகசியமாக பேசுவேன். வீட்டில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி சுற்றி வந்து தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.
ஆனால், பள்ளி முடிந்த பிறகு அந்த காதல் காணாமல் போய்விட்டது. நான் என்னுடைய துறையில் பிஸியாகிவிட்டேன். அவர் அவருடைய துறையில் பிஸியாகிவிட்டார். அவர் திருமணமும் செய்துவிட்டார்.