அயோத்தியில் சாஸ்திரத்தை மீறிட்டாங்க… சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு..
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜனவரி 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அத்துடன் அன்றைய தினம் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
சாஸ்திரத்தின் படி இச்செயல் ஏற்புக்குரியதல்ல என பூரியின் கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். அதே போல் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக கூறியுள்ளார். ராமர் கோவில் இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் அதே நேரத்தில் லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் 3 அடுக்குகளைக் கொண்டது.
இந்தக் கோவில் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் ‘கருடா’ போன்ற சிலைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணல் கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும். ஜனவரி 22 ல் அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பூரியின் கோவர்த்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி ராமர் கோவில் விழாவில் நிர்வாகிகள் சாஸ்திரத்தை மீறுவதாக புகார் வைத்துள்ளார். இந்த விழா “சாஸ்திரங்களுக்கு எதிராக” அல்லது “புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக” நடத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.