இதை தெரிஞ்சிக்கோங்க..! கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்தச் சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும். பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்கப் பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறையக் கோயில்களின் கீழே அதுவும் இந்தக் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்புத் தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கம் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்குக் கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை விரயம் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்தச் சக்தி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி வழக்கமாக கோயிலுக்குச் செல்லும் ஆட்களுக்குத் தெரியும் ஒருவித இனம்புரியாத சக்தி அந்தக் கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்திச்சுற்றுப் பாதை இது தான். அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்திச் சுற்றுப்பாதை கூடச் சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பிலும் மனதிலும் சக்தி/ வலு வந்து சேரும். இந்தக் காந்த மற்றும் ஒருவித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பிரபஞ்ச சக்தி (பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி) ஆகும்.
மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதைச் சுற்றிக் கண்ணாடி அது செயற்கை ஒளிவட்டம் வருவதற்க்கு அல்ல. அது அந்தச் சக்தியை அப்படித் திருப்பும் ஒரு உக்தியாகும்.