வங்கி வாடிக்கையாளர்களே இன்றே செய்யுங்க.. இல்லாவிட்டால் பணம் கிடைப்பதில் சிக்கல்.!!
நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.13ம் தேதி 2வது சனி, ஜன.14 ஞாயிறு வார விடுமுறை, ஜன.
15 தைப்பொங்கல், ஜன. 16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 5 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, வங்கி தொடர்பான பணிகளை இன்றே வாடிக்கையாளர்கள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ATM-மில் பணத் தட்டுப்பாடு வராது எனவும் கூறப்பட்டுள்ளது.