|

குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு: பெரியகுளத்தில் மாரத்தான் போட்டி

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது.

இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினான்கு வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது.

இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டுள்ளது. 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது. புதிய திருப்பம் பேகுவ சட்டம் இயற்றபட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையின் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மேற்கு தொடர்ச்சி மலை மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் 2, 4, 8, 6, 10, 21 கிலோமீட்டர் தூரத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் சஞ்சீவனா, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் பங்கேற்ற மாரத்தான் வீரர்கள் இலக்கை நோக்கி ஓடிச் சென்று திரும்பி துவங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்த, முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு 3000 ரூபாய், 2000 ரூபாய், 1000 ரூபாய் என ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினர். மேலும் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *