Mercury Zodiac: புதனின் வக்ரத்தால் கஷ்டப்பட போகும் ராசிகள்

புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசன் ஆக விளங்கி வருகிறார் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவர்களுக்கு காரணமாக விளங்கி வருகிறார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
புதன் பகவான் துலாம் மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார்.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று வக்ர நிலைக்கு மாறினார். புதன் பகவானின் இந்த பின்னோக்கிய பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களை தவறாக புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருங்கள். பெரிய சண்டைகள் ஏற்படும் போது அதனை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
ரிஷப ராசி
புதன் பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் பல சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
கடக ராசி
உங்கள் ராசியில் புதன் பகவான் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறையும் தருணம் ஏற்பட்டால் தைரியமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.