கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம் திரைப்படங்கள் மூலம் கவணம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதா நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களம், நட்சத்திர பட்டாளம் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய கேப்டன் மில்லர் அதை நிறைவேற்றியுள்ளது. இன்று காலை திரையரங்குகளில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

https://twitter.com/Chandrakan76691/status/1745643313393471961

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *