தங்கம் விலை சரிவுக்கு எண்ட்கார்டு.. இனி ஏறுமுகம் தானா..?
தங்கத்தையும், தங்க நகைகளையும் யாருக்கு தான் பிடிக்காது, பிறப்பு முதல் இறப்பு வரையில் மக்களின் அங்கமாகத் தங்கம் இருப்பதைத் தாண்டி செல்வம், சொத்தாகப் பார்க்கப்படுவதால் தங்கம் எப்போதும் மதிப்புடையதாகவே பார்க்கப்படுகிறது.இந்தியாவில் தங்கம் இல்லாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
இதனால் இதன் விலையும் சர்வதேச சந்தை பொறுத்தும், டாலர் மதிப்பீட்டை பொருத்தும் மாறுபடும். அந்த வகையில் இந்தியாவில் தங்கம் விலை டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து குறைந்த வந்தபோது மக்கள் மிகவும் ஆர்வாகத் தங்கத்தை வாங்கிச் சேர்க்கத் துவங்கினார். இந்த இடைப்பட்ட காலத்தில் இன்னும் எவ்வளவு நாள் தங்கம் விலை குறையும் எனக் காத்திருந்தவர்களும் அதிகம்.டிசம்பர் 28ஆம் தேதி 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 5945 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், ஜனவரி 11 வரையில் தொடர்ந்து சரிந்து 5810 ரூபாய் வரையில் சரிந்தது. இதன் மூலம் இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டுமே 1 கிராம் தங்கம் விலை சுமார் 135 ரூபாய் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலகட்டத்தில் தங்கம் வாங்கிப் பலன் அடைந்தோர் எண்ணிக்கை ஏராளம்.ஆனால் டிசம்பர் 28 ஆம் தேதிக்கு பின்னர் இன்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 10 கிராம் தங்கம் விலை 100 ரூபாய் வரையில் அதிகரித்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகப் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை கணிசமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2030 டாலரில் இருந்து 2037 டாலருக்கு உயர்ந்து வர்த்தகம் செய்யப்படுகிறது.இதேபோல் எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.64 சதவீதம் உயர்ந்து 62,180 ரூபாயாக உயர்ந்து காணப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ 0.70 சதவீதம் உயர்ந்து 71,851.00 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.இதன் எதிரொலியாக இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 58,200 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 63,490 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் அதிகரித்து 46,560 ரூபாயாக உள்ளது.வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நேற்றை விலையான 77.500 ரூபாயாக உள்ளது, இதைத் தொடர்ந்து இன்று இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தும் பிளாட்டினம் விலையிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 10 கிராம் 19,640 ரூபாயாக உள்ளது.