டாடா சன்ஸ் சந்திரசேகரன் மாஸ்டர் பிளான்.. தமிழ்நாடு, குஜராத் கூட்டத்திற்குப் பின் இப்படியொரு அறிவிப்பு..
2024 ஆம் ஆண்டை அதிரடியாகத் துவங்கிய டாடா குழுமம் ஜனவரி 1ஆம் தேதியே டாடா காஃபி நிறுவனத்தை டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் TCPL Beverages & Foods கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது.
டாடா காஃபி நிறுவனத்தின் கீழ் தான் டாடா குழுமத்தின் காஃபி சாகுபடி, ஸ்டார்பக்ஸ் வர்த்தகம் உள்ளது. இந்தியாவில் 54 நகரங்களில் 390 ஸ்டார்பக்ஸ் கடைகள் உள்ளது.இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு, குஜராத் மாநில முதலீட்டாளர் கூட்டத்தில் டாடா குழுமம் அடுத்தடுத்து மெகா முதலீடுகளையும், முக்கியமான திட்டங்களையும் வெளியிட்டு அசத்தியது டாடா குழுமம். இதைத் தொடர்ந்து தற்போது 2 புதிய நிறுவனங்களைக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமம் எப்படிப் பிஸ்லெரி, ஹால்திராம்ஸ் பிராண்டுகளை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதோ அதேபோல் Ching’s Secret மற்றும் ஆர்கானிக் இந்தியா பிராண்ட்களைக் கைப்பற்றும் பேச்சு வார்த்தை துவங்கியது.இதில் பிஸ்லெரி மற்றும் ஹாஸ்திராம்ஸ் கைப்பற்றும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் Ching’s Secret மற்றும் Organic India பிராண்டுகளைக் கைப்பற்றும் திட்டம் தொடர்ந்து நடந்து வரும் வேளையில் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.கேப்பிடல் புட்ஸ் நிறுவனம் Ching’s Secret மற்றும் Smith & Jones கீழ் நூடில்ஸ் முதல் இஞ்சி பூண்டு பேஸ்ட் வரையில் தயாரித்து விற்கப்படுகிறது.இதேபோல் Fabindia முதலீட்டில் இயங்கும் ஆர்கானிக் இந்தியா நிறுவனம் ஆர்கானிக் டீ மற்றும் பல்வேறு ஹெல்த் ப்ராடெக்ட்களை விற்கிறது.இந்த இரு பிராண்டாகளையும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் வாங்குவது மூலம் புதிய வர்த்தகத்தில் நுழைவதோடு, புதிய வாடிக்கையாளர்களையும் ஈர்க்க முடியும். டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் தற்போது 1.06 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படுகிறது.இதேவேளையில் இன்று இந்நிறுவன பங்குகள் 1.57 சதவீதம் உயர்ந்து 1,137.25 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 5.22 சதவீதம் உயர்ந்த டாடா கன்ஸ்யூமர் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் 426.21 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.