2 மாசம் அசத்துனா போதும்.. அவர் டி20 உ.கோ தொடர்நாயகனாக வந்துருவாரு.. சுரேஷ் ரெய்னா கணிப்பு
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
அதற்கு தயாராவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
மொகாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 159 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் சிவம் துபே அதிரடியாக விளையாடிய 60* ரன்கள் எடுத்து வெற்றி பெற உதவினார். குறிப்பாக ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய அவர் கடைசியில் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
ரெய்னாவின் கணிப்பு:
மேலும் பந்து வீச்சில் 2 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்து அசத்தியதால் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்திய சீனியர் அணியில் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் ஆல் ரவுண்டராக அசத்தும் பட்சத்தில் அடுத்ததாக நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் சிவம் துபே விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அப்படி வாய்ப்பு கிடைத்தால் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி அவர் தொடர்நாயகன் விருதை வென்றால் ஆச்சரியப்படாதீர்கள் என்ற அதிரடியான கணிப்பை தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி கலர்ஸ் சினிபிளக்ஸ் சேனலில் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடரில் சிவம் துபேவை சென்னை அணியில் எம்எஸ் தோனி எப்படி பயன்படுத்துகிறார் என்று பலரின் கவனம் இருக்கும்”
“ஒருவேளை இந்த ஐபிஎல் தொடரின் 2 மாதங்களும் சிறப்பாக செயல்பட்டால் உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த உலகக் கோப்பையில் அவர் தொடர் நாயகனாக இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள். தற்போது பந்து வீச துவங்கியுள்ளதால் கேப்டன் இவரை வைத்து 2 ஓவர்களை தொடர்ந்து வீசலாமா அல்லது எப்போதாவது பயன்படுத்தலாமா என்று நினைப்பார். மேலும் அவர் 4 முதல் 7 வரை அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்யக் கூடியவர்”
மீட்டரில் ஆஸ்திரேலியா எங்கள ஏமாத்துனா.. நான் ஒன்னும் செய்ய முடியாது.. ஷாஹீன் அப்ரிடி பதிலடி
“கரீபியன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் மைதானங்களில் அவரால் ஸ்லோ பந்துகளை வீசி தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பொதுவாக தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் போது உங்களால் முடிந்தளவுக்கு அதிக ரன்களை குவிக்க முடியும். அந்த வகையில் தற்போது அவரிடம் தன்னம்பிக்கையும் ஆர்வமும் இருக்கிறது. மேலும் நமக்கு டாப் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவர் இடது கை வீரராக தேவைப்படுகிறது. எனவே உலகக்கோப்பைக்கான டிக்கெட்டை துபே பெறுவார் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.