இது சூப்பரான காருன்னு சொன்னாங்களே! ஆனா ஒருத்தரு கூட போன மாசம் வாங்கல! ஏன் தெரியுமா?

சிட்ரோன் நிறுவனத்தின் இசி3 என்ற எலெக்ட்ரிக் காரை கடந்த டிசம்பர் மாதம் ஒருவர் கூட வாங்கவில்லை என்ற சோகமான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இந்த கார் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு விற்பனைக்கு வந்த நிலையில் திடீரென ஒருவர் கூட இந்த காரை வாங்க தயாராக இல்லை என்பது மிக வருத்தமான செய்தியாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் சிட்ரோன் இந்நிறுவனம் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆலை அமைத்து கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முயற்சி செய்தது. தற்போது சிட்ரோன் நிறுவனத்திடம் சி5 ஏர்கிராஸ், சி3, இசி3, மற்றும் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்கள் விற்பனையில் உள்ளன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரம் குறித்த அறிக்கையை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மிக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று இருந்தது.

சிட்ரோன் நிறுவனத்தின் இசி 3 என்ற எலெக்ட்ரிக் கார் கடந்த டிசம்பர் மாதம் யாராலும் வாங்கப்படவில்லை. அதன் விற்பனை பூஜ்ஜியமாக இருந்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 271 கார்கள் விற்பனையான நிலையில் அடுத்த நான்காவது மாதத்தில் யாருமே இந்த காரை வாங்காத அளவுக்கு விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கூட இந்த காரை 18 பேர் வாங்கி இருந்தார்கள்.

டிசம்பர் மாதம் சிட்ரோன் இசி 3 கார்ன் விற்பனை மட்டும் வந்தமல்ல மற்ற கார்களின் விற்பனையும் மிக மோசமான நிலையிலேயே இருந்துள்ளது. மொத்தம் 2 பேர் மட்டுமே வாங்கி இருந்தார்கள்.சி3 காரை 309 பேரும், சி3 ஏர் கிராஸ் காரை 339 பேரும் வாங்கி இருந்தார்கள். கடந்த டிசம்பர் மாதம் இந்நிறுவனம் மொத்தமாக 650 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

சிட்ரோன் இசி3 என்பது இந்த பிராண்டில் வந்த முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கார் மிகக் குறைவான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ரூபாய் 11.61 லட்சம் முதல் 13 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள டியாகோ இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகிய காருக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது.

சிட்ரோன் காரில் 29.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 57 பிஎஸ் பவரையும் 143 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 320 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 10.30 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 ஆம்ஸ் பாயிண்ட் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த காரை சார்ஜ் செய்ய டிசி பாஸ்ட் சார்ஜரும் வழங்கப்படுகிறது. இது 10 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 57 நிமிடத்தில் சார்ஜ் செய்து விடுகிறது. இந்த காரில் உள்ள பிற அம்சங்களை பற்றி பார்க்கும்போது இந்த காருக்குள்ளே 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆப்ஷன் இருக்கிறது.

மேலும் இந்த காரில் மேனுவல் ஏசி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஆகியன உள்ளன. இதுபோக கீழே சென்று அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், மற்றும் கனெக்டெட் கார் தொழில்நுட்பங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் இரண்டு ஏர்பேக்குகள் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்கம் பார்க்கிங் சென்சார், 315 லிட்டர் அளவிலான பூட் ஸ்பேஸ் ஆகிய வசதிகள் இந்த காரில் இருக்கிறது.

இவ்வளவு அம்சங்கள் கொண்ட இந்த காரை கடந்த டிசம்பர் மாதம் யாருமே வாங்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல் தான். ஆனால் இப்படி மக்கள் இந்த காரை விரும்பி வாங்காமல் இருப்பதற்கு இந்த காரின் அம்சங்கள் மற்றும் அதன் தயாரிப்பு தன்மை காரணமல்ல. சிட்ரோன் என்ற நிறுவனம் புதிய நிறுவனமாக இருப்பதால் மக்களுக்கு இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை. இது மட்டுமல்ல இந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களும் போதுமான அளவில் இல்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *