மிடில்-கிளாஸ் மக்களுக்காகவே கியா உருவாக்கி உள்ள புதிய கார்! ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. கொரியன் ஸ்டைல் கார்

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சொனெட் காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை என்ன? என்பதையும், இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அப்டேட்களையும் பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

சமீப காலத்தில் இந்திய சந்தையில் நுழைந்து வெற்றி பெற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் ஒன்றாக கியாவை சொல்லலாம். தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான இது, 2019இல் செல்டோஸின் மூலம் இந்திய மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. அதன்பின், 2020ஆம் ஆண்டின் இறுதியில் மிடில்-கிளாஸ் மக்களாலும் வாங்கக்கூடிய விலையில் சொனெட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.

அறிமுகம் செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆனதை அடுத்து, சொனெட்டை அப்டேட் செய்யும் வேலைகளில் கடந்த சில மாதங்களாகவே கியா ஈடுப்பட்டுவந்தது. இந்த முயற்சியின் வெளிப்பாடாக, புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. அதாவது, விலையை தவிர்த்து காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் அப்போதே வெளியிடப்பட்டுவிட்டன.

அதனை தொடர்ந்து, 2024 சொனெட் காருக்கான முன்பதிவுகளும் துவங்கின. இதற்கிடையில், ஜனவரி 12ஆம் தேதி 2024 கியா சொனெட் கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (ஜன.12) புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.7.99 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் கார் எச்.டி.இ (HTE), எச்.டி.கே (HTK), எச்.டி.கே+ (HTK+), எச்.டி.எக்ஸ் (HTX), எச்.டி.எக்ஸ்+ (HTX+), ஜி.டி.எக்ஸ்+ (GTX+) மற்றும் எக்ஸ்-லைன் (X-Line) என மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொனெட் கார் வேரியண்ட்களை மொத்தம் 11 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

2024ஆம் ஆண்டிற்கான அப்டேட்களாக, சொனெட் காருக்கு முற்றிலும் புதிய முன்பகுதியை கியா நிறுவனம் வழங்கியுள்ளது. காரின் முன்பக்கத்தில் புதிய கிரில், திருத்தப்பட்ட வடிவிலான முன்பக்க & பின்பக்க பம்பர்கள், புத்துணர்ச்சியான டிசைனில் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி கனெக்டட் டெயில்லேம்ப்கள் மற்றும் 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை கியா நிறுவனம் வழங்கியுள்ளது.

2024 சொனெட் காருக்கு உள்ளே, வயர்லெஸ் மொபைல் கனெட்டிவிட்டி வசதி உடன் புதிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், கடந்த 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும். அவற்றை அப்படியே, 2024 சொனெட்டிற்கும் கியா வழங்கியுள்ளது.

வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், ரீடிசைனில் ஏர்கான் பேனல், சரவுண்ட் வியூ மானிடர் மற்றும் லெவல் 1 அடாஸ் உள்ளிட்டவை 2024 சொனெட் காரின் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும். மற்றப்படி, சொனெட் காரின் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான 3 என்ஜின் ஆப்ஷன்களில் சொனெட் கிடைக்கும். 2024 சொனெட்டின் மூலம் டீசல் என்ஜின் உடனும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கியா விற்பனை செய்யவுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *