புது பைக் வாங்கும் பிளான்ல இருக்கீங்களா? கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க! எதா இருந்தாலும் 23க்கு அப்புறம் போடுங்க!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் புதுமுக பைக் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது. ஓர் டீசர் படத்தை வெளியிட்டதன் வாயிலாகவே இந்த தகவல் உறுதியாகியிருக்கின்றது. அது பைக்கின் டீசர் படம் ஆகும். இந்த படத்தின் வாயிலாகவே ஹீரோ அறிமுகம் செய்ய இருப்பது ஓர் புதுமுக பைக் என்பது நிச்சயமாகியுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) அறியப்படுகின்றது. இந்த நிறுவனமே வெகுவிரைவில் இந்தியாவில் புதுமுக பைக்கை அறிமுகம் செய்ய தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹீரோ அந்த புதுமுக பைக்கின் டீசர் படத்தை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த புத்தம் புதிய பைக் வருகின்ற 23 ஆம் தேதி அன்று இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. ஹீரோ நிறுவனம் இந்த புதுமுக பைக்கை ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடலான எக்ஸ்440-ஐ தழுவி உருவாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில், ஹார்லி டேவிட்சனுக்காக இந்தியாவில் வைத்து தயார் செய்யப்பட்ட பைக் மாடலே எக்ஸ்440 ஆகும். இதுவே அந்த பிராண்டின் மலிவு விலை பைக் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இதனை தழுவியே ஹீரோ அதற்கான புதுமுக பைக்கை உருவாக்கி இருக்கின்றது.
இது விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே, அதன் பக்கம் இந்தியர்களைக் கவரும் விதமாக டீசர் படங்களை ஹீரோ வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படமானது ஹீரோவின் அந்த புதுமுக பைக்கின் நேரெதிர் தோற்றத்தை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. மேலும், இந்த பைக்கை சற்று வித்தியாசமான ஸ்டைலில் உருவாக்கி இருப்பதையும் நம்மால் உணர முடிகின்றது.
குறிப்பாக, ஹெட்லைட் மற்றும் ஃப்யூவல் உள்ளிட்டவை முற்றிலும் மாறுபட்ட ஸ்டலைலில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே இப்போது பலரின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தை இந்த பைக் பிடித்திருக்கின்றது. இந்த ஹெட்லைட்டின் உட்பகுதியிலேயே பகல்நேரத்தில் ஒளிரும் லைட்டும் இடம் பெற்றிருக்கின்றது. ‘H’ ஆங்கில எழுத்தை பிரதிபலிக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இத்துடன், இதன் ஃப்யூவல் டேங்கைச் சுற்றிலும் ஃபாக்ஸ் ஏர் இன்டேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அந்த பைக்கிற்கு கூடுதல் முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கைக் காட்டிலும் கம்மியான விலைக்கு இந்த பைக் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது.
அந்தவகையில், ரூ. 2 லட்சம் அல்லது 2.20 லட்ச ரூபாக்கும் குறைவான விலையிலேயே இந்த பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் எதிர்பார்க்கலாம். இந்த பைக் ஹீரோ மேவ்ரிக் 440 எனும் பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது.
இந்த பைக்கில் 440 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதிக் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 எச்பி பவரையும், 38 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.