டீ அதிகம் கொதித்தால் ஆரோக்கியத்திற்கு தீங்கா.? டீ போட சரியான வழி இதோ..!

‘ டீ’ பெரும்பாலான மக்களின் விருப்பமான பானம். பலர் டீயுடன் தான் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். ஒருவேளை அவர்கள் அன்று டீ குடிக்கவில்லை என்றால் அன்று நாள் முழுவதும் அவர்களுக்கு வேளை ஏதும் நடக்காது. அந்த அளவுக்கு டீ மீது அவர்களுக்கு ஈர்ப்பு அதிகம். மேலும், பலரின் டீ மீதான காதல் கிட்டத்தட்ட ஒரு போதையாக மாறிவிட்டது. எனவே அவர்கள் ஒரு நாளைக்கு பல முறை டீ அருந்துகிறார்கள். இன்னும் சிலர் ஒரு கிளாஸ் டீ குடிச்சா போதும் தலை வலி எல்லாம் பறந்து போய்விடும் என்று சொல்லி, தலை வலிக்கும் போதெல்லாம் டீ குடிப்பார்கள்.

அதுமட்டுமின்றி, டீ உற்சாகத்தைத் தருகிறது மற்றும் புத்துணர்ச்சி ஊட்டுவதாக பலருக்கு அனுபவம் உண்டு. மேலும் டீ மீது பைத்தியமாக இருப்பவர்கள் நினைக்கும் நேரத்தில் டீ குடிக்கவில்லை என்றால் பதற்றமாக உணர்வார்கள். அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும், டீ குடிக்கும் பழக்கத்தை எளிதில் போக்க முடியாது. இவர்களுக்காக, பொது இடங்களில் எங்கு பார்த்தாலும் பல டீக்கடைகள் இருக்கிறது.

டீ பிரியர்களில் பல வகை உண்டு. எப்படியெனில், சிலர் சோர்வு நேரத்தில் மட்டும் டீ குடிப்பார்கள். இன்னும் சிலரே ஸ்ட்ராங் டீ குடிக்க விரும்புவார்கள்.
சிலர் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடிப்பார்கள். ஆனால் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நல்ல மற்றும் ஸ்ட்ராங் டீயை தயாரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள் இங்கே..

டீ போடுவதற்கான சரியான வழி:

  • முதலில் தேயிலை தூளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • தேயிலை சாறு தண்ணீரில் இறங்கினால், அதன் நிறம் மாறும்.
  • தண்ணீரின் நிறம் மாறிய பின், இரண்டு நிமிடம் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நல்ல, வலுவான தேநீர் கிடைக்கும்.
  • அதை விட அதிக நேரம் டீயை கொதிக்க வைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தேயிலை ருசியை உண்டாக்க பலர் தேயிலை தூளில் கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கிறார்கள்; ஆனால் இப்படி செய்வதால் கிராம்பு, ஏலக்காய் இரண்டின் வாசனை வராது. எனவே இந்த கூறுகளை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.

சர்க்கரை டீ நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அத்தகையவர்களுக்கு தேநீர் தயாரிப்பதில் சர்க்கரைக்கு பதிலாக, தேன், நாட்டு சர்க்கரை, வெல்லம், அதிமதுரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இது டீயை இனிமையாக்குவதுடன், சாதாரண டீயை விட வித்தியாசமான சுவையையும் தரும். நிச்சயமாக, இது ஒரு உணவியல் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

இஞ்சி, ஏலக்காய், துளசி ஆகியவை டீயின் சுவையை அதிகரிக்கும். இந்த பொருட்களை ஒன்றாக அரைத்து கொதிக்கும் நீரில் சேர்த்தால், சுவை நன்றாக இருக்கும். உங்களுக்கு துளசி டீ பிடிக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக இரண்டு கிராம்பு மற்றும் சிறிது இலவங்கப்பட்டை பொடியை டீயில் சேர்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *