மக்களை நெகிழவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தில் கேப்டன் விஜயகாந்த்? வாழ்த்தி செல்லும் ரசிகர் கூட்டம்!
கடந்த 2015 ஆம் ஆண்டு “இன்று நேற்று நாளை” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கிய ஆர். ரவிக்குமார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் உருவாக்க துவங்கிய திரைப்படம் தான் “அயலான்”. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் 14வது திரைப்படமாக வெளியாக இருந்தது. இருப்பினும் அப்போதைய தொழில்நுட்ப வசதியின்மை காரணமாக சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இந்த திரைப்படம் ஒத்தி வைக்கப்பட்டது.