தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி.!

இந்த காலகட்டத்திற்கு ஏற்ப நிற்காமல் நாம் வேலை வேலை என்று ஓடுவதால் கிடைக்கும் உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறோம். முக்கியமாக இளம் வயதினர் எதிர்கொள்ளும் உடல் பருமன் இதில் அடங்கும்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க நாம் பல வழிகளை மேற்கொள்கிறோம். ஆனால் அதில் முழுமையான பலன் கிடைக்கும் என்றால் சந்தேகம் தான்.

அவ்வாறு உடல் இளைக்க, தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக ஆரோக்கியன இந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சியை ட்ரை பண்ணி பாருங்க.

கருப்பு கவுனி அரிசியில் அதிகளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது புற்றுநோயை தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது.

இந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சியை காலையில் குடித்து வந்தால் நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைப்பதோடு, முழுமையாகவும் வைத்திருக்கும். மேலும் நமக்கு சீக்கரம் நமக்கு பசிக்காது.

தேவையான பொருட்கள் :

கருப்பு கவுனி அரிசி – 200 கிராம்

பாசி பருப்பு – 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1/2 கைப்புடி

தக்காளி – 1

கேரட் – 1

பூண்டு – 3 பல்

தண்ணீர் – 6 கப்

பச்சை மிளகாய் – 2

தேங்காய் பால் – 300ML

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை

புதினா இலை

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கருப்பு கவுனி அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

குறிப்பு : ஊறவைத்த கருப்பு கவுனி அரிசி தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதை கஞ்சி செய்யும் போது நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

முதலில் ஊறவைத்த கருப்பு கவுனி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் கழுவிய பாசி பருப்பையும் சேர்த்து கொரகொரவென்று நொய் போல் அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் தீயை மிதமாக வைத்து வெந்தயம், சீரகம், நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.

அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து கிளறி விட்டு அதனுடன் நறுக்கிய கேரட் சேர்த்துக்கொள்ளவும்.

சிறிது நேரம் அவற்றை கிளறிவிட்டு அதனுடன் தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலையை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி விட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக வதக்கவும்.

லேசாக வதங்கியவுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசியை இதனுடன் சேர்த்து கிளறி விடவும்.

பிறகு இதில் 6 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவேண்டும் (ஏற்கனவே நாம் எடுத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசி ஊறவைத்த நீரையும் சேர்த்து 6 கப் தண்ணீர்)

தண்ணீர் ஊற்றிய பிறகு உங்கள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

பிறகு இரண்டு பச்சை மிளகாயை அதில் உடைத்து போட்டு நன்கு கொதிக்க விடவும்.

அனைத்தும் நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடிவிட்டு 4 முதல் 5 விசில் வரும்வரை மிதமான தீயில் வைக்கவும்.

4 முதல் 5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து குக்கரில் ஆவி போனவுடன் விசிலை அகற்றி கஞ்சியை கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.

பிறகு அதில் திக்கான தேங்காய் பால் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

குறிப்பு : தேங்காய் பால் ஊற்றும் போது அடுப்பு அணைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பால் திரிந்து விடும்.

கடைசியாக கஞ்சியின் மீது வெட்டி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி விடவும்.

அவ்வளவுதான் மணக்க மணக்க சுவையான கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெடி..

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மேலும் இது அனைவருக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும்…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *