“பிரதமர் மோடி ராமரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்..” 1990 ரத யாத்திரையை நினைவு கூர்ந்த எல்.கே. அத்வானி
ராமர் கோயில் கட்டப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விதியால் தீர்மானிக்கப்பட்டது என்று பாஜக மூத்த தலைவரான எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார். அந்த பணியை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியை விதி தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ‘ராம் மந்திர் நிர்மான், ஏக் திவ்ய ஸ்வப்னா கி பூர்தி’ என்ற தலைப்பில் வெளியாக உள்ள கட்டுரையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘ராஷ்ட்ர தர்மம்’ இதழின் சிறப்புப் பதிப்பில் இந்த கட்டுரை இடம்பெற உள்ளது.