கொல்கத்தா தாதா சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்!
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே எம்.எஸ்.தோனி, மேரி கோம், கபில் தேவ், மிதாலி ராஜ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாக்கப்பட இருக்கிறது.