நடிகர் கமல்ஹாசனின்237-வது படத்தின் அப்டேட்.. இயக்குனர்கள் யார் தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், கமலின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், கமலின் 237-வது படத்தின் மூலம் இயக்குநர்களாக களமிறங்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

 

இவர்கள் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் இயக்குநர்களாவும் பணிபுரிந்து குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *