‘தமிழ்ல சொல்லுங்க சார்.. ஒன்னும் புரியல’ – கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ட்ரைலர்!
இந்தி தெரியாது போயா’ என்ற வசனத்துடன் வெளியான கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் டீசர் கவனம் பெற்றுள்ளது.
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ரகு தாத்தா’ படத்தின் திரைக்கதை, 1960-களில் நடக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
‘தமிழ்ல சொல்லுங்க சார்.. ஒன்னும் புரியல’, ‘இந்தி தேர்வு எழுதினால்தான் பதவி உயர்வு கிடைக்கும்னா அது தேவையில்ல’, ‘இந்தியை திணிக்காதே’ போன்ற வசனங்களை கீர்த்தி சுரேஷ் பேசுவது போல் டீசரில் இடம்பெற்றுள்ளன.
இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தியுள்ள கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, படத்திற்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எகிறியுள்ளது.