இது தெரியுமா ? சூடான காபி அல்லது தேநீரில் எலுமிச்சபழ சாறு கலந்து அருந்தி வந்தால்.
* உளுத்தம் பருப்பை ஊற வைத்து, அதனுடன் எலுமிச்சம் பழச் சாறை விட்டு மைய அரைத்து, சேற்றுப்புண் மீது தடவினால் சரியாகிவிடும்….
* எலுமிச்சம் பழத்தோலை காலில் அடி பாகம், கை முட்டி, கணுக்கால், முகம் போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால், தடவிய இடங்கள் பளபளப்பதுடன், கருமை மறையும்.
*வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு கிளாஸ் லெமன் சாறு கலந்து குடித்து வாருங்கள். இது காலையில் உங்களுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கவும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
* ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து, இளநீரில் கலந்து குடித்தால், உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி காணாமல் போய் விடும்….
* எலுமிச்சம் பழச்சாறு, புதினா இலை சாறு இரண்டையும் சம அளவு கலந்து, தினமும் இருவேளை, 5 மில்லி சாப்பிட்டு வர, நன்கு பசியெடுக்கும்….
*குளிர், பனிக்காலங்களில் குளித்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயுடன் ஒரு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு குழைத்து, கை, முகம், கழுத்து பகுதிகளில் பூசுங்கள். நாள் முழுவதும் தோல் பளபளப்பாக இருப்பதோடு, வறட்டுத்தன்மை இருக்காது….
* தினமும் எலுமிச்சம் பழச்சாறை அருந்தி வந்தால், வாய் நாற்றம் நீங்கி விடும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
தலைவலி நீங்க:
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
பித்தம் குறைய:
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
பற்கள் ஆரோக்கியம் :
உங்க பற்களை பராமரிக்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி வரலாம். இது பல்லவியில் இருந்து விடுபட உதவுகிறது. புகைப்பிடித்தலால் பற்களில் ஏற்படும் நிகோடின் கரையை அகற்ற லெமன் உதவுகிறது. லெமன் சாறு கொண்டு ஈறுகளை மசாஜ் செய்யும் போது ஈறுகளில் ஏற்படும் இரத்த போக்கை நிறுத்துகிறது. மேலும் இது பல்வேறு ஈறுநோய்களில் இருந்து எழக்கூடிய துர்நாற்றத்தை போக்குகிறது.