கண் திருஷ்டிக்கு என்ன பரிகாரம் தெரியுமா ?
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம்.
நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள்.
‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது” இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. திருஷ்டி, மனிதர்களுக்கு மட்டும் அல்ல செடி, கொடி மரங்களுக்கும் உண்டு.
இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி போன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம் :
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும். ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும். கண் திருஷ்டி போக்க பரிகாரங்களை பார்ப்போம்.
ஆயிரம் யானைகளை அடக்குபவனை விட, தன் மனதை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்.
மனம் எதிலும் ஈடுபடாமல் மவுனமாக இருபதில்தான் இன்பம் இருக்கிறது .