வேகமா எடை குறைய.. காலையா, மாலையா? எப்போது நடைப்பயிற்சி செய்வது சிறந்தது?
மேலும் குளிர்காலத்தில் கிடைக்கும் உணவுகளும் விரைவாக எடையை அதிகரிக்கின்றன. ஆகையால் இந்த காலத்தில் உடல் எடையை குறைக்க சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும். சில எளிய இயற்கையான வழிகளில் குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த வழியாகும். நடைப்பயிற்சி ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சி. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 ஆயிரம் படிகள் நடக்க எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். நடைப்பயிற்சி கொலஸ்ட்ரால் (Cholesterol), ரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் சர்க்கரை அளவை (Sugar Level) கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது தவிர, நடைப்பயிற்சி கால் தசைகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதோடு, நடைப்பயிற்சி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி (Walking For Weight Loss)
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு தினமும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் நடைப்பயிற்சி உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது பிடிவாதமான உடல் கொழுப்பு மற்றும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகிறது. ஆனால் சிலருக்கு காலையில் நடக்க நேரம் கிடைக்கும், சிலருக்கு மாலையில்தான் நேரம் கிடைக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் காலையில் நடப்பது நல்லதா அல்லது மாலையில் நடப்பது நல்லதா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. எந்த நேரத்தில் செய்யப்படும் நடைப்பயிற்சி (Walking) உடல் எடையை வேகமாகக் குறைத்து சிறந்த பலனைத் தரும்? எது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையா, மாலையா? எப்போது நடந்தால் எடை வேகமாக குறையும்?
உடல் எடையை குறைக்கும் (Weight Loss) போது, நடைப்பயிற்சி சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். இது அனைவராலும் செய்யக்கூடியது.