சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!
சீதாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது தவிர நீர் சத்து, மாவு சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை இந்த சீதாப்பழத்தில் அதிக அளவில் அடங்கியுள்ளது.
சீதாப்பழம் சாப்பிடுவதின் மூலம் ரத்தம் உற்பத்தி அதிகரிக்கும். உடல் வலிமை பெருகும். சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராகும்.
இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன் நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ விதைகளை உலர்த்தி பொடி செய்து அதில் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் வராது.
வெந்தயம், சிறு பயிர் இரண்டையும் சேர்த்து ஊற வைத்து அரைத்து சீதாப்பழ விதை பொடி உடன் கலந்து தலையில் தேய்த்து வர தலைக்கு குளிர்ச்சி பெறும். முடி உதிர்வை கட்டுப்படுத்தும். பொடுகு தொல்லை குணமாகும்.
சீதாப்பழ விதை பொடியை கடலை மாவுடன் கலந்து எலுமிச்சை சாற்றில் குழைத்து தலையில் தேய்த்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். புதிய முடிகள் வளரும்.
சீதாப்பழ மரத்தின் இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இலைகளின் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை ஒரு அருமருந்தாகும். சீதாப்பழ மரத்தின் வேர் கருசிதைவை கட்டுப்படுத்த உதவுகிறது.