சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நாட்கள்?
ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் தினம் என்பதும், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் ஜனவரி 16, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி ஸ்டார் ஹோட்டல்களில் இயங்கி வரும் கிளப் மற்றும் பார்க் அனைத்தும் மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
சென்னையில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் முன்கூட்டியே சரக்குகள் வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதால் மது விற்பனையில் பெரிய அளவில் சரிவு இருக்காது என கூறப்படுகிறது.