நாங்கள் ராமருக்கு எதிரியில்லை.. அயோத்தி செல்வேன்: கர்நாடக முதல்வர் சித்தராமையா ..!
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் யாரும் செல்லவில்லை என்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட யாரும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ‘நாங்கள் ராமருக்கு எதிரியில்லை என்றும் நான் அயோத்தி செல்வேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 22ஆம் தேதிக்கு பிறகு இன்னொரு நாளில் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது நாங்கள் ராமருக்கு எதிரி இல்லை, இதை வைத்து அரசியல் செய்யும் பாஜகவுக்கு தான் எதிரி. ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட்ட பின்னர் இன்னொரு நாளில் ராமர் கோயிலுக்கு செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் திறப்பு விழாவை முற்றிலும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையா ராமர் கோவிலை ஆதரிப்பதாகவும் ராமர் கோவிலுக்கு செல்வேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.