பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் இருந்து தப்பிக்க, மக்கள் அதிகம் மெட்ரோ ரயில்களை நாட தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 9 கோடியே 11 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வரும் 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.