உங்கள் “முதல் ஒரு கோடி” ரூபாயை ஈட்டுவது எப்படி? எவ்வளவு முதலீடு செய்யணும்? எத்தனை காலம் செய்யணும்

சென்னை: சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அதை விரைவாக அடைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் விளக்கியுள்ளார்.

 

கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்பது இங்குள்ள அனைவரது விருப்பமாக இருக்கும். இதற்காக நாம் பல்வேறு வழிகளில் முயல்வோம். ஆனால், ஒரு கோடி என்ற அந்த இலக்கை அனைவராலும் அடைந்துவிட முடியாது.

இந்த ஒரு கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய நாம் என்ன செய்ய வேண்டும். எளிதாக இந்த இலக்கை அடைய என்ன வழி, இதற்கு எத்தனை காலம் தேவைப்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

முதல் ஒரு கோடி: இது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் கே ராஜேஷ் கூறுகையில், “முதல் “₹1 கோடி” – Your First One Crore… நீங்கள் உங்கள் “முதல் ஒரு கோடி” ரூபாயை ஈட்டுவது எப்படி? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எத்தனை காலம் முதலீடு செய்ய வேண்டும்? முதல் கோடியை ஈட்டுவது மட்டுமே சிரமம். ஆனால், அப்படி ஈட்டிவிட்டால், உங்களது அடுத்த கோடியை வெறும் ஆறு ஆண்டுகளில் அடைந்துவிடலாம்.

இப்படி வைத்துக் கொள்ளலாம்.. வருடாந்திர CAGR: 12%.. முதலீடு: Index Funds (Nifty 50).. முதல் கோடியை ஈட்டியவுடன், அதை withdraw செய்யாமல் அப்படியே, அதே fund ல் முதலீட்டைத் தொடர்ந்திருந்தால் மட்டுமே, கடைசி இரண்டு column ல் உள்ளது போல் சாத்தியமாகும். சேமிப்பு + முதலீடு = செல்வம்.. சேமிப்பு + முதலீடு + பொறுமை = பெருஞ்செல்வம்” என்று பதிவிட்டுள்ளார்,

26 ஆண்டுகள்: மேலும், அவர் கோடிகளைச் சேமித்து வைப்பது எப்படி என்பதை எளிதாக விளக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். அதாவது நீங்கள் மாதம் 5 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்தால் கூட போதும்.. 26 ஆண்டுகளில் உங்கள் முதல் ஒரு கோடியைச் சேமிக்க முடியும். அதாவது இந்த 26 ஆண்டுகளில் நீங்கல் 15,60 லட்சம் முதலீடு செய்து இருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு லாபமாக மட்டும் 91.95 லட்ச ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் உங்கள் மொத்த லாபம் 1.07 கோடியாக அதிகரிக்கும்.

அதேபோல 10 ஆயிரம் முதலீடு செய்தால் 21 ஆண்டுகளில் இலக்கை அடையலாம். 10 ஆயிரம் முதலீடு செய்யும் போது நாம் 25 லட்சம் முதலீடு செய்து இருப்போம். நமக்கு லாபமாக மட்டும் 88 லட்சம் வரும். இப்படி 15 ஆயிரம் முதலீடு செய்தால் 17 ஆண்டுகளிலும் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளிலும் ஒரு கோடி ரூபாயைச் சேமிக்க முடியும். என்னடா ஒரு கோடியைச் சம்பாதிக்க இத்தனை ஆண்டுகளா என உங்களுக்குக் கோபம் வரலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *