கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மோதி ராணுவ வீரரின் மனைவி பலி
தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் கனரக லாரிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த கனரக வாகனங்களால் நாள் தோறும் பல்வேறு பகுதிகளில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கனிமவளம் ஏற்றி ஏற்றி வரும் கனரக லாரிகள் மோதி 10க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை பகுதியில் பாலம் முடியும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த கனரக லாரி மோதியதில் பீனா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் உயிரிழந்த பீனாவின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் பூதபாண்டியை சேர்ந்த சகாய பால்சன் என்பவரை தேடிவருகின்றனர். கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி சென்ற லாரி மோதி பெண் உடல்சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அதிவேகமாக செல்லும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.