கார் ஜன்னலில் மாட்டிய குழந்தையின் தலை.. கண்ணாடியை உடைத்து மீட்ட நபர்: வைரல் வீடியோ
கார் ஜன்னலில் மாட்டிக்கொண்ட குழந்தையின் தலையை பத்திரமாக மீட்க உதவிய நபரின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சற்று குழப்பமும் அடைந்துள்ளனர். இந்த வீடியோவில் காரை நோக்கி ஓடும் நபர், தனது கைகளால் காரின் ஜன்னலை அழுதிப்பிடித்து கீழே இறக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. எப்படி குழந்தையின் தலை ஜன்னலில் மாட்டிக்கொண்டது என்ற விவரம் நமக்கு தெரியவில்லை. ஒருவேளை காரில் பிரச்சனை ஏற்பட்டு, ஜன்னல் கதவு தானாக மூடியிருக்கலாம். இந்த வீடியோ எந்த தேதியில், எந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
சமீபத்தில் இந்த வீடியோ CCTV Idiots என்ற பெயரிலுள்ள கணக்கிலிருந்து பிரபல சமூக ஊடகமான X தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி 10-ம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, தற்போது வரை 3.9 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவில் ஜன்னல் இடுக்கில் மாட்டிகொண்ட குழந்தையின் அழுகை நம்மை பயமுறுத்துவதாக உள்ளது. நல்லவேளையாக அந்த நபர் விரைந்து செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினார்.
‘ஜன்னலில் மாட்டிக் கொண்ட குழந்தையின் தலை’ என தலைப்பிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பலரும், ஏன் குழந்தையின் அருகில் அமர்ந்திருக்கும் பெண் ஜன்னலை கீழே இறகவில்லை என ஆச்சர்யமாக கேட்கின்றனர். மோசமான பெற்றோர்! முதலில் குழந்தையின் தலை எப்படி இதில் மாட்டியது? குழந்தைகளை ஒழுங்காக கண்காணிக்காவிட்டால் இப்படிதான் மோசமான சம்பவம் நிகழும் என ஒருவர் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
குழந்தையை காப்பாற்றிய அந்த நபரையும் பலரும் பாராட்டியுள்ளனர். எல்லா ஹீரோக்களும் தொப்பி அணிந்திருப்பதில்லை. இந்த கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருக்கும் நபர் உண்மையிலேயே ஹீரோதான். அவருடைய சூப்பர்பவர் மிக விரைவாக இருந்தது என்றும் விரைவாக செயல்பட்டார். இது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனென்றால் ஜன்னல் கண்ணாடி அவ்வுளவு எளிதில் உடையாது. அந்தக் குழந்தை மிகுந்த அதிர்ஷ்டசாலி. என்றும் கூறி பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்படி கார் ஜன்னல் கதவில் குழந்தை மாட்டிக்கொள்ளும் சம்பவம் நடப்பது முதல்முறை அல்ல. கடந்த வருடமும் இதேப்போன்ற ஒரு வீடியோ வைரலானது. குழந்தை ஜன்னலின் வெளியே தலையை நீட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரியாமல் கவனக்குறைவாக அந்த நபர் ஜன்னல் கதவை உயரே ஏற்றிவிட்டார். குழந்தையின் கழுத்து சிக்கிக்கொண்டது. என்ன காரணமோ தெரியவில்லை, பின்னர் ஜன்னல் காண்ணாடியை உடைத்தே குழந்தையை மீட்க முடிந்தது.
The kid get stuck on the window going up pic.twitter.com/r6j5n5zFAa
— CCTV IDIOTS (@cctvidiots) January 10, 2024
தேதி குறிப்பிடப்படாத வைரல் வீடியோவைப் பார்த்த ஒருவர், குழந்தையின் தலை ஜன்னலில் சிக்கிக் கொண்டது தெரிந்ததும், அருகிலிருந்த பெண் உடனடியாக விண்டோ பட்டனை பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் அறிவார்ந்த செயல். ஆனால் அவரோ கையால் அதை கீழிறக்க முயற்சிக்கிறார். இன்னும் நிறைய பேருக்கு பொது அறிவு வளர வேண்டியுள்ளது என இன்னொரு நெட்டிசன் கருத்து பதிவிட்டுள்ளார்.
மோசமான பெற்றோர் எனப் பலரும் அந்தப் பெண்ணை திட்டுகின்றனர். இது எல்லாரும் செய்யக்கூடிய தவறுதன். ஆனால் குழந்தை சிக்கிக் கொண்ட்தைப் பார்த்ததும் ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கியிருக்கலாம் என இன்னொரு நபர் கருத்து பரிமாறியுள்ளார்.