பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு!
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. எல்லா சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு பல வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டது.
மக்களை கவரும் வகையில் போட்டியாளர்களும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் செய்து மக்களை கவர்ந்தனர்.
நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் என்பதால் எந்த போட்டியாளர் வெற்றியாளராக போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேறினார். தற்போது வீட்டிற்குள் மணி சந்திரா, மாயா கிருஷ்ணன், விஷ்ணு , தினேஷ்,அர்ச்சனா ஆகியோர் இருக்கிறார்கள்.
இவர்களில் எந்த போட்டியாளர் அதிகமான வாக்குகளை பெறுவார்களோ அவர் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர். நம்மபதக்க வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி பார்த்தால் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அர்ச்சனா தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இணையத்தளத்தில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையை வைத்து பார்க்கையில், அவர்கள் பகிர்ந்த தகவலின் படி, அர்ச்சனா தான் அதிகம் வாக்குகளை பெற்றுள்ளார் என்றும், அவருக்கு அடுத்ததாக மணி சந்திரா 17% வாக்குகளைப் பெற்று, நிகழ்ச்சியின் இரண்டாம் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
யார் இந்த சீசன் வெற்றியாளர் என்பது நாளை தெரிந்துவிடும். ஏனென்றால், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நாளை (ஜனவரி 14) அன்று ஒளிபரப்பாகவுள்ளது. எனவே யார் வெற்றியாளர் ஆகப்போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.