விப்ரோ ஊழியர்களே உஷாரா இருங்க.. டிசம்பர் காலாண்டில் என்ன நடந்தது..?!!
இந்திய ஐடி சேவைத் துறையில் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிறுவனமாக விப்ரோ திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகப்படியான சம்பளத்தை வாங்கும் சிஇஓ-வை வைத்துக்கொண்டு உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து இழப்பது மட்டும் அல்லாமல் புதிய வர்த்தகத்தை அதிகளவில் பெற முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.இந்த நிலையில் ரிஷாத் பிரேம்ஜி தலைமையிலும், சிஇஓ தியரி டெலாபோர்டே தலைமையிலும் இயங்கும் விப்ரோ டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் 2,694 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும், இதேபோல் 2023 செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் வெறும் 1 சதவீதம் அதிகமாகும்.மேலும் டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 22,205 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 4.4 சதவீதமும், செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 1.4 சதவீத குறைவான அளவீடாகும்.டிசம்பர் காலாண்டில் விப்ரோ சுமார் 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது, இது செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே அதிகம். வருடாந்திர அடிப்படையில் 13.5 சதவீதம் குறைவாகும்.TCS, இன்போசிஸ், விப்ரோ-க்கு மோசமான காலம்.. 3 நிறுவனத்திலும் ஒரே கதை.. தலை தப்புமா..?!! டிசம்பர் காலாண்டில் 100 மில்லியன் டாலருக்கு அதிக மதிப்புடைய 22 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, 75 மில்லியன் டாலருக்கு மேல் 31 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,349 ஆக உள்ளது. மேலும் டாப் 10 வாடிக்கையாளர்களிடம் இருந்து மட்டுமே 20.5 சதவீத வருவாயைப் பெற்று வருகிறது.விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 10 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 12.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. விப்ரோ டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 4,473 பேர் குறைந்து 2,40,234 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.