எங்களுக்கு சாப்பாடு வேண்டும்.. உடனடியாக முதல்வர் உத்தரவிட வேண்டும்: அன்புமணி
எங்களுக்கு சாப்பாடு என்ற சமூக நீதி வேண்டும் என்றும் அதற்கு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பது குறித்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே அன்புமணி தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசை எடுத்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மட்டும் ஏன் மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க சொல்கிறார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் எங்களுக்கு சமூக நீதி என்ற சாப்பாடு வேண்டும் என்றும் எனவே ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழ்நாடு அரசுக்கு அவர் வலியுறுத்தி உள்ளார்.
எங்களுக்கு பசி எடுக்கிறது, சாப்பாடு என்றால் சமூகநீதி, பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் உரிய வேலை வாய்ப்பு கிடைத்தால் தான் தமிழ்நாடு தானாக முன்னேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.