அமிர்தகுடம் ஏந்திய அபூர்வ முருகன்!

தமிழ்நாட்டின் ‘மூக்முனை’ என்று வர்ணிக்கப்படும் வனம் சூழ்ந்த கடற்கரை தலம் தான் கோடியக்கரை.

வேதவனத்தின் தென்கோடியாக இருக்கும் இக்கோடியக்கரை காடுகளால் சூழப்பட்டுள்ளது. எங்கு நோக்கினும் உப்பளங்கள் காணப்படுகின்றன. கோவில் இருக்கும் இடம் கோடியக்காடு என்றும் கடற்கரை பகுதி கோடியக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. நவகோடி சித்தர்கள் வழிபட்ட இந்த பதில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. இதற்கு சான்றாக சித்தர் கட்டம் ஒன்றும் கடற்கரையில் உள்ளது .

தலத்திற்கு அருகே அகத்தியர் தங்கி சிவபூஜை செய்த ‘அகத்தியம்பள்ளி’ என்ற சிவதலம் அமைந்துள்ளது. சோழநாட்டு காவிரி தென்கரையில் 127 வது திருத்தலமாக இது புகழ் பரப்பி நிற்கின்றது. சுந்தரர் இத்தலம் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார் .சேரமான் பெருமானுடன் இங்கு வந்த சுந்தரர் வேடர்கள் பலர் இங்கு வாழ்ந்ததாக குறிப்பிட்டு இத்தல அம்பிகையை ‘மையார் தடங்கண்ணி’ என்று புகழ்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இத்தால முருகன் மீது திருப்புகழ் மாலை ஒன்றை சாத்தியுள்ளார்.

கோடிய காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான் சேதுபந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும். திருவாவடுதுறை குருமூர்த்திகளான சித்தர் சிவப்பிரகாசர் இங்கே ஜீவசமாதி அடைந்துள்ளார். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனை பெறலாம் என்கிறார்கள். எனவே இது ஆதி சேது என்று போற்றப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் இந்த திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது .இந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார்வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினார்.அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார்.

அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனர்.எனவே இத்தளத்தில் அருளும் முருகப்பெருமான் தன்னுடைய கரங்களில் நீலோற்பமலரையும் அமிர்தத்தையும் தாங்கியபடி அருள் பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத்துளிகள் சிவலிங்கமாக உருவானது.

அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேஸ்வரர் ஆவார். வடநாட்டில் நர்மதை ஆற்றங்கரையில் சுவேத முனிவருக்கும் சுசீலை அம்மைக்கும் மகனாக பிறந்தவர் குழக முனிவர். இவர் தனது நாட்டை விட்டு இங்கே வந்து தவம் புரிந்து முக்தி பெற்றுள்ளார். முருகன் சிறப்பினாலும் குழகமுனிவர் பூஜித்தமையாலும் இத்தலம் குழகர் கோவில் என்று வர்ணிக்கப்படுகிறது. தென்கொண்டு அருள் பாலிக்கிறாள் அன்னை அஞ்சனாச்சி. அருகே வனதேவதையான காடு கிழாளும் தரிசனம் அளிக்கிறாள். மகா மண்டபத்தில் குழக� முனிவரும் அருள்பாளிக்கின்றார். கருவறையில் அமிர்தகடேஸ்வரர் சதுர ஆவுடையார் கொண்டு வீற்றிருக்கிறார்.

பிரகாரத்தில் அமுத கிணறு ஒன்று உள்ளது கணபதியும் இங்கே அமிர்த கணபதி என்று அழைக்கப்படுகிறார். மேற்கில் தனி சன்னதி கொண்டு ஒருமுகம் ஆறு திருக்கரமாக அருள் பாலித்து வருகிறார் முருகன்.அவருடன் வள்ளி , தெய்வானை ஆகிய இரண்டு தேவிகளும் இருக்கின்றனர். இந்த முருகப்பெருமான் ‘அமிர்தகரசுப்பிரமணியர்’ என்றும் ‘கோடிக்குழகர்’ என்றும் அழைக்கப்படுகின்றார் .இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன. சரியாக பேச்சி வராத குழந்தைகள் இங்கு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தேனை பருகினால் சிறந்த பலனை பெறுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *