இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைப் பதவிக்கான மற்றொரு போட்டியாளர் எனப் பேசப்பட்டது ஆனால், இன்றைய கூட்டத்தில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து, காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.
தலைவரைத் தேர்ந்தெடுப்பது இந்தியா கூட்டணியின் பல சவால்களில் ஒன்று மட்டுமே. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமூகமாக உடன்பாடு ஏற்பட வேண்டும்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 2024 லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதைத் தடுக்கும் நோக்கில் உருவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கமல்நாத்தும் ம.பி. மாநிலத் தலைவர் பதவியி இருந்து நீக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியுடனான காங்கிரஸ் கட்சியின் உறவு சர்ச்சைக்குரியதாக உள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அதிக தொகுதிகளில் போட்டியிட பெற விரும்புகிறது. இதுமட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சி கோவா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.