சித்த மருத்துவர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்தில் இந்த பொரியல் பேமஸ்: ஈசி ரெசிபி
சித்த மருத்துவர் சிவராமன், வீட்டு கல்யாணத்தில் அனைவரும் விரும்பி இந்த தென்னங்குருத்து பொரியலை சாப்பிட்டு உள்ளனர் . அதன் ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்
1 கப் தென்னை குருத்து
2 ஸ்பூன் தேங்காய் துருவல்
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் நறுக்கியது 10
பச்சை மிளாய் 4 நறுக்கியது
1 கொத்து கருவேப்பிலை
தக்களி 1 நறுக்கியது
2 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
உப்பு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து அதில் கடுகு, கருவெப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் தக்காளியை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தென்னை குருத்து நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய் துருவலை சேர்த்து கிளரவும்.