கோதுமை, வாழைப் பழம் போதும்: சுவையான பணியாரம் இப்படி செய்து அசத்துங்க
கோதுமை, வாழைப் பழம் சேர்த்து சுவையான பணியாரம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு- 1 கப்
தேங்காய்- 3/4 கப்
வாழைப் பழம்- 4
வெல்லம்- 3/4 கப்
நெய்-தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
ஏலக்காய் தூள்- தேவையான அளவு
முந்திரி (தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்)
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 4 வாழைப் பழம், தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கோதுமை மாவு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையில் 2 டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பின் அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் நெய்யில் 10 முந்திரியை வறுத்து இந்த மாவில் சேர்க்கலாம். இப்போது பணியாரச் சட்டி வைத்து நெய் ஊற்றி நாம் செய்து வைத்த மாவில் பணியாரம் ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான மண மணக்கும் கோதுமை வாழைப் பழ பணியாரம் ரெடி.