காட்டில் மறைந்திருக்கும் சிங்கம்… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்பார்வை உண்மையில் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழப்பமானவை. அவற்றில் சில நமது மூளையின் எந்தப் பகுதி செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன, சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிங்கத்தை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கிங். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களுக்கு மிகவும் ஒரு பிடித்தமான சவாலாக உள்ளது. சிங்கம், புலி, கரடி, யானை, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றால் நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. இந்த இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட், ஆளுமையை குறிப்பிடுவதற்கு, உளவியல் டெஸ்ட், இணையப் புதிர் என பல வகைகளாக உள்ளன. அதிலும், படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்கும் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் மிகவும் சுவாரசியமானது.