இப்படி கூட தங்கத்தை கடத்த முடியுமா.. பதர வைக்கும் வீடியோ..!!
தங்கத்திற்கு மயங்காதவர்கள் யார்? ஆணாக இருந்தாலும், சரி பெண்ணாக இருந்தாலும் சரி தங்கம் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் வெளிநாடுகளில் குறைவான விலையில் தங்கத்தை வாங்கி இந்தியாவுக்குக் கொண்டு வருவது அனைவரும் கடைப்பிடிக்கும் விஷயம். அப்படிக் கொண்டு வரப்படும் தங்கத்திற்குப் பல்வேறு லிமிட் உள்ளது, இந்த லிமிட்-க்குள் தங்கத்தைக் கொண்டு வருவதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் பலர் திருட்டுத்தனமாக அதிகளவிலான தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பல திட்டாலங்கடி வேலைகளைச் செய்கின்றனர். அப்படிக் கேரளாவில் ஒரு பெண் பயணி NIVEA FACE CREAM டப்பாவில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தைத் திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் கொண்டு வந்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து வீடியோவும் வெளியாகியுள்ளது, வாங்கப் பார்ப்போம். ஜனவரி 11ம் தேதி கொச்சி விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்பிலான அறிவிக்கப்படாத தங்கத்துடன் பெண் ஒருவர் பிடிபட்டார். கொச்சி சுங்கத் துறையின் படி, அந்தப் பெண் நான்கு தங்க Rod-களை வளையல் போல் வளைத்து நிவியா கிரீம் டப்பிற்குள் மறைத்து வைத்திருந்தார். சுங்கத்துறை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துனர், இத்தாலி நாட்டின் ரோமில் இருந்து கொச்சிக்கு வந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். அந்தப் பெண் கிரீன் சேனல்-க்குள் கடந்து செல்ல முயன்று கொண்டிருந்தார். இந்தக் கிரீன் சேனல் என்பது வரி விதிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லாத பயணிகளுக்கான வேகமாகக் கிளியரென்ஸ் கொடுக்கும் சேவையை விமான நிலையத்தில் அளிக்கப்படும் ஒரு சேவை. மடியில் கணம் இருந்த காரணத்தால் இந்தப் பெண் திட்டமிட்டு கிரீன் சேனலுக்குள் சென்றார், ஆனால் விமான நிலைய சுங்கத்துறை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் கட்டம் கட்டி பிடித்துள்ளனர். ரோம் நகரில் இருந்து வந்த அந்தப் பெண் பயணியின் செக்-இன் சாமான்களை ஸ்கேன் செய்ததில், சந்தேகத்திற்கிடமான ஸ்கேனிங் படம் கிடைத்தது. மேலும் ஆய்வு செய்ததில், நிவியா கிரீம் டப்பாவில் 36.06 ரூபாய் மதிப்பிலான 640 கிராம் எடையுள்ள நான்கு தங்கக் rod-கள் கிரீம் உடன் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்ட நிலையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிவியா கிரீம் டப்பா ஷூ-க்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டது.