புத்தாண்டை 13 நாட்கள் கழித்து கொண்டாடும் பிரித்தானிய மக்கள்: ஏன் தெரியுமா?

ஜனவரி மாதத்தின் பாதியில் பிரித்தானியாவின் வேல்ஸ் கிராமம் ஒன்று புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரியத்தை கொண்டுள்ளனர்.

ஜனவரி நடுவில் புத்தாண்டு

பிரித்தானியாவில் வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வேல்ஷ்(Welsh-வேல்ஸ் பகுதி மக்களின் பாரம்பரிய மொழி) கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் அடிப்படையில் ஜனவரியின் நடுவில் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள குவான் பள்ளத்தாக்கில்(The Gwaun Valley) வசிக்கும் 300 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பாரம்பரியத்தின் படி Hen Galan என்று அழைக்கப்படும் பழைய புத்தாண்டு முறையின் படி, ஜனவரி 13ம் திகதி புத்தாண்டை கொண்டாடி வரவேற்கின்றனர்.

இந்த மக்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இனிப்புகள் மற்றும் பணத்திற்காக குழந்தைகள் வீடு வீடாக சென்று பாடல்களை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர், இதனை இவர்கள் “hel calennig” என்று அழைக்கின்றனர்.

ஜூலியன் காலண்டர்

இந்த பாரம்பரியம் தொடர்பாக ஒய் லியன் க்வின்(Y Llien Gwyn) என்ற உள்ளூர் செய்தித்தாளின் ஆசிரியர் போனி டேவிஸ்(Bonni Davies) வழங்கிய தகவலில், இந்த சமூகத்தினரின் புத்தாண்டு கொண்டாட்டம் ஜூலியன் நாட்காட்டியை பின்பற்றி கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான உலகத்தினரால் கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar-கிரேக்க நாட்காட்டி) பின்பற்றப்பட்டு வருகிறது.

பழைய காலண்டரின்(ஜூலியன் நாட்காட்டி) அடிப்படையில் ஜனவரி 13ம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்த குவான் பள்ளத்தாக்கு மக்கள் முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

1752ம் ஆண்டு பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக கிரிகோரியன் நாட்காட்டி ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *