ஜேர்மன் தொழிற்சாலையில் நச்சு வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில் அனுமதி…
ரசாயனங்களை சேமித்துவைத்தல், வெடிபொருட்களை சேமித்து வைப்பதுபோலவே அச்சத்திற்குரிய விடயமாக மாறிவருகிறது.
அதிகம் வெளியே தெரியாத ஆபத்து
இந்தியாவின் போபால் நகரில், யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த விடயம் நினைவிருக்கலாம்.
உலகின் முன்னேற்றத்துக்கு தொழிற்சாலைகள் அவசியம் என்றாலும், அவற்றால் ஆபத்துக்கள் உள்ளதையும் மறுப்பதற்கில்லை. விடயம் என்னவென்றால், பல நாடுகளில் மக்கள் பயணிக்கும், பயன்படுத்தும் ரயில் நிலையங்களுக்கு அருகிளேயே இத்தகைய ரசாயன சேமிப்பகங்கள் உள்ளதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு ரசாயன சேமிப்பகம் இருப்பதே கவனத்துக்கு வருகிறது என்பது கவலைக்குரிய விடயம்தான்.
ஜேர்மன் தொழிற்சாலையில் ரசாயனனக் கசிவு
நேற்று, தெற்கு ஜேர்மனியிலுள்ள Konstanz நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலை ஒன்றில், ரசாயனம் ஒன்று சேமித்துவைக்கப்பட்டிருந்த தொட்டியில், திடீரென நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.
அதனால் தொழிற்சாலைக்குள் அந்த நச்சு வாயு பரவத் துவங்க, அதை சுவாசித்த தொழிலாளர்களுக்கு சுவாசப் பிராசினைகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக 25 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, அவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.