உறவினரை காண ஆசையாக சென்ற அக்கா-தங்கை மரணம்! விபத்தை ஏற்படுத்திய மாணவர்கள்

சென்னையில் பெண்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த மாணவர்கள் மோதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சகோதரிகள்

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சகோதரிகள் பவானி (38), சுபா (37). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி, அவரவர் தம் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர்.

அத்துடன் அவர்கள் வாழும் பகுதியிலேயே மீன் வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் பவானி, சுபா தங்கள் உறவினர் வீட்டிற்கு செல்ல காசிமேட்டிற்கு கிளம்பியுள்ளனர்.

இதற்காக ஆட்டோவில் ஏற சாலையை கடக்க இருவரும் முயன்றனர். அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் அவர்கள் மீது மோதியுள்ளனர்.

பாதி வழியில் இறந்த பெண்

இதில் பவானி, சுபா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தியிலேயே சுபா பரிதாபமாக பலியானார்.

ஆனால், உயிருக்கு போரடிக் கொண்டிருந்த பவானி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களை கைது செய்தனர்.

அப்போது அவர்கள் பரத் (20), பாலகிருஷ்ணன் (20) என்பதும், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *