பிரபல மாடல் அழகி கொலை.. பல நாட்களாக தேடப்பட்ட அவரின் உடல் – குற்றவாளிகளின் வாக்குமூலத்தால் கிடைத்த தகவல்!

பஞ்சாபில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யாவின் சடலம் வீசப்பட்டு, அது நீரில் ஓட்டத்தால் அண்டை மாநிலத்திற்கு அடித்து செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஹரியானாவின் தோஹ்னாவில் இருந்து குருகிராம் காவல்துறையின் ஒரு குழு, உடலை மீட்டுள்ளது. பஹுஜாவின் உடலை அடையாளம் காட்டிய குடும்பத்தினருக்கு சடலத்தின் புகைப்படங்களை அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. “பிரபல மாடல் அழகி திவ்யா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி கொல்லப்பட்ட நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டது” என்று மூத்த குர்கான் காவல்துறை அதிகாரி முகேஷ் குமார் கூறினார். “பாதிக்கப்பட்டவரின் உடலை அவரது பச்சை குத்தல்கள் மூலம் நாங்கள் அடையாளம் கண்டோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், இறந்த திவ்யாவின் உடலை பஞ்சாபில் உள்ள கால்வாயில் வீசியதாக நேற்று வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று மாலை கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தில் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்ட பால்ராஜ் கில், குருகிராமில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட்டியாலாவில் உள்ள கால்வாயில் முன்னாள் மாடல் அழகி உடலை அப்புறப்படுத்தியதாக போலீசாரிடம் விசாரணை நடத்தியபோது தெரிவித்தார்.

திவ்யா பஹுஜா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி குர்கான் ஹோட்டலில் கொல்லப்பட்டார், சிசிடிவி காட்சிகளில் கொலையாளிகள் அவரது உடலை ஹோட்டலில் இருந்து காரில் இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. 27 வயதான அந்த மாடல் அழகியை ஐந்து பேர் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர். ஹோட்டல் உரிமையாளரின் ஆபாசமான படங்களைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்பட்டதால் அந்த பெண் தலையில் சுடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

திவ்யா பஹுஜா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது அப்போதைய காதலனும், குருகிராம் கேங்ஸ்டருமான சந்தீப் கடோலியின் போலி என்கவுண்டரில் ஈடுபட்டதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர் இவ்வாண்டு கொல்லப்பட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *