Happy Teeth: ‘ரூட் கனால்’ சிகிச்சை யாருக்கெல்லாம் தேவை?
பல் மருத்துவத்தில் மிகவும் பொதுவாக நம் காதுகளில் விழும் வார்த்தை ‘ரூட் கனால்’ சிகிச்சை (Root Canal Treatment) பாதிக்கப்பட்ட பல்லை நீக்காமல் காப்பாற்றுவதற்காக செய்யப்படும் சிகிச்சை.
இந்தச் சிகிச்சையானது நவீன கால தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும் இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே வழக்கில் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிருள்ள மனிதனுக்கு கி.மு 3500 ஆண்டுகளுக்கு முன்பாக சுமேரியர்கள் இந்தச் சிகிச்சையைச் செய்ததற்கான சான்றுகள் உள்ளன.
கூர்மையான கற்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தி பல்லை நீக்குவதற்காக பல்லில் வேர்வரை செல்லும் இந்தச் சிகிச்சையை சுமேரியர்கள் செய்துள்ளனர். கி.மு 600 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய இத்தாலியர்கள் மத்தியிலும் இந்தச் சிகிச்சை பிரபலமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பல்லில் துளையிட்டு பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கிவிட்டு, அந்தப் பகுதியில் தேன் மெழுகை வைத்துப் பூசியுள்ளனர் என்கிறது வரலாறு.
முன்பெல்லாம் பல் வலி என்றால் பல்லில் உள்ள சொத்தையை நீக்கிவிட்டு பல்லை அடைப்பது அல்லது பல்லை நீக்கிவிடுவது ஆகிய இரண்டு சிகிச்சைகள்தான் இருந்தன. ஆனால் தற்போது ரூட் கனால் சிகிச்சையைப் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தச் சிகிச்சை அவசியமானதா, யாரெல்லாம் இதைச் செய்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தருகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா.