கருப்பு கவுனி அரிசி”யின் மருத்துவ பயன்கள்!
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
இந்த அரிசியில் நார்சத்து அதிகமாக உள்ளதால் கொஞ்சம் சாப்பிட்டாலே அதிக உணவு சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்கிறது.
கருப்பு கவுனி அரிசி இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் நமது உடலில் உள்ள நச்சு மூலக்கூறுகள் நீங்கும்.
கருப்பு கவுனி அரிசி உணவாக எடுத்துக் கொண்டாள் கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக செயல்பட செய்யும்.
இதனை உண்பதன் மூலம் செரிமான உறுப்புகள் சீராக இயங்கும். உடல் உஷ்ணம், வயிற்றுப்போக்கு, வயிற்று உப்பசம் போன்ற கோளாறுகளை தடுக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
அதே சமயத்தில் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ஸ் என்ற ஊட்ட பொருள் ரத்தத்தில் உள்ள பிரீரேடிகல் மூலக்கூறுகளால் ஏற்படும் நச்சுக்களை நீக்குகிறது.