பாலியல் உறவில் மூலம் பரவும் HPV தொற்று.. தடுப்பதற்கான வழிகள் என்ன..?
இந்தியாவில் வருடம் தோறும் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? இதற்கும் HPV தொற்றுக்கும் என்ன தொடர்பு? இதற்கான தடுப்பூசிகள் என்ன போன்றவற்றை இந்தக் கட்டுரையில் தெளிவாக பார்ப்போம்.
ஹ்யூமன் பாபிலோமா வைரஸ் (HPV) என்றால் என்ன?
நமது சருமத்தையும் சளி சவ்வுகளையும் பாதிக்கும் பொதுவான வைரஸ் தொற்றே ஹ்யூமன் பாபிலோமா வைரஸ் (HPV) என அழைக்கப்படுகிறது. 100 வகையான HPV தொற்றுகள் உள்ளது. அதில் சில பிறப்புறுப்பில் மருக்கள் வருவதற்கு காரணமாக இருப்பதோடு பல்வேறு புற்றுநோய்களையும் உண்டாக்குகிறது.
எவ்வாறு HPV பரவுகிறது?
முக்கியமாக இருவருக்கு இடையே பாலியல் உறவுகளின் போது HPV தொற்று பரவுகிறது. இது பிறப்புறுப்பு, ஆசனவாய் அல்லது வாய்வழி புணர்தல் மூலமாக ஒருவருக்கு பரவுகிறது. பெரும்பாலும் இது எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
HPV தொற்றின் பொதுவான அறிகுறிகள் :
பல HPV தொற்றுகள் வெளிப்படையாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது. எனினும் பிறப்புறுப்பில் உள்ள மருக்கள் வலியை ஏற்படுத்தக்கூடும். இந்த மருக்கள் சிறிதாக தோன்றி பிறப்புறுப்பு, ஆசனவாய் அல்லது வாயைச் சுற்றி காலிஃபிளவர் போல் வளரக்கூடியது.
HPV எப்படி புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது?
சில ஆபத்தான HPV தொடர்ச்சியாக தொற்றை ஏற்படுத்தக் கூடியவை. இதன் காரணமாக திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது மற்றும் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க முடியும்.
HPV தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்திடுங்கள் :
தடுப்பூசி: HPV தடுப்பூசிகளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஆண்களும் பெண்களும் தாராளமாக போட்டுக் கொள்ளலாம்.
பாதுகாப்பான உடலுறவு: நோய் தொற்று பரவாமல் இருக்க பாலியல் உறவுகளின் போது உறை பயன்படுத்துங்கள்.
பரிசோதனை: கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையான Pap smears-யின் போது நோய்த்தொற்றை ஆரம்பகட்டத்திலே கண்டறிய முடியும்.
கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?
பெண்ணின் இனப்பெருக்க உருப்புகளில் ஐந்து வகையான புற்றுநோய்கள் பாதிக்கிறது. பெண்ணின் கருப்பையின் கீழ் பகுதியில் கருப்பை வாய் உள்ளது. இதில் உருவாவதே கருப்பை வாய் புற்றுநோய். ஹ்யூமன் பாபிலோமா வைரஸ் (HPV) இந்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது. HPV தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் கருப்பை வாய் புற்றுநோய் வரும் ஆபத்துள்ளது.
கருப்பை வாய் புற்றுநோயின் ஆபத்தை குறைக்கும் வழிகள் :
HPV தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதுதான் ஒரே வழி. அதேப் போல் HPV பரிசோதனை மற்றும் Pap test-யும் எடுத்துப் பாருங்கள்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிராக யாரெல்லாம் தடுப்பூசி போடலாம்?
9 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் HPV தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். பெரும்பாலும் ஆண்களின் மூலமாகவே HPV தொற்று பெண்களுக்கு பரவி, அது நாளடைவில் புற்றுநோயாக வளர்கிறது.
எந்த HPV தடுப்பூசி நோய்த்தொற்றை தடுக்கும்?
தற்போது மூன்று தடுப்பூசிகள் உள்ளது. முதல்முறையாக கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Cervavac தடுப்பூசி மற்றும் Quadrivalent தடுப்பூசி ஆகியவை எளிதாக கிடைக்கிறது.