சாப்பிடுவதற்கு சுவையாகவும்.. ஆரோக்கியத்திற்கு இதமாகவும் இருக்கும் ‘பூண்டு மிளகு சாதம்’ கண்டிப்பா செய்யுங்க!
‘உணவே மருந்து’ என்று நம் முன்னோர்கள் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு உணவு தான் ‘பூண்டு மிளகு சாதம்’. இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம். இது எளிதான மற்றும் சுவையான உணவு ஆகும். இந்தப் பூண்டு மிளகு சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதனால் செரிமானம் எளிதாகும், ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் சுவையாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு பெஸ்ட் உணவு இதுவாகும். வீட்டில் கிடைக்கும் குறைந்த பட்ச பொருட்களை வைத்து, இந்த அரிசியை நொடியில் செய்யலாம்.