ஆசிய கோப்பை கால்பந்து தொடர் – ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் இந்தியா தோல்வி!
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்று வருகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அந்த அகையில் 18ஆவது சீசனுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரானது கடந்த 12 ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இந்த தொடரில் 24 அணிகள் இடம் பெற்று 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகள் இடம் பெற்று மொத்தமாக 36 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில், இந்தியா குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.