Relationship : உறவில் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் வழிகள்!
ஒப்புகையளித்தால் உறவில் உணர்வுகளை வெளிப்படுத்தி, ஒப்புகையளிப்பது உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. தீர்வுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இரண்டும் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
திறந்த உரையாடல்
உங்களின் இணையருடன் உங்களின் உணர்வுகளை நீங்கள் திறந்த மனதுடன் செய்ய வேண்டும். இருவருக்கும் உள்ள ஏமாற்றங்கள் குறித்து திறந்து பேசினாலே போதும். அதுவே புரிதல் மற்றும் தீர்வுகளுக்கும் உதவுகிறது.
எதிர்பார்ப்புகளில் பிரதிபலியுங்கள்
உங்கள் எதிர்பார்ப்புகள் உண்மையாக இருந்தால் அதை உங்கள் இணையருடன் கலந்து பேசுங்கள். எதிர்பார்ப்புகளை சரிசெய்தாலே போதும். அது உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
உங்கள் இணையர் மீது அனுதாபம்
உங்கள் இணையரின் கோணம் மற்றும் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள். அனுதாபம் கொள்வது இருவரின் புரிதலுக்கும் வழிவகுக்கும்.
தெளிவு
தெளிவான உரையாடல் இல்லாமல் ஏமாற்றம் ஏற்பட்டால், உடனடியாக தெளிவான விளக்கத்தை பெறுங்கள். உங்கள் இணையரின் கோணத்தில் இருந்து தெளிவான விளக்கத்தை பெறுங்கள். அப்போதுதான் புரிதலின்மை விலகும்.
தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள்
ஏமாற்றத்தை எண்ணிக்கொண்டே இருக்காமல், ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்தால், ஒரு நல்ல தீர்வு காணலாம். பிரச்னைகளை தீர்க்கும் தன்மை உங்கள் உறவை பலப்படுத்தும்.
சுய நலன் பேணுதல்
உங்களின் உணர்வு ரீதியிலான ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்ளுங்கள். அது உங்களுக்கு ஆரோக்கியமான மனநிலையை கொடுக்க உதவும்.
உங்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள்
உங்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் குணமாக நேரம் கொடுங்கள். தீர்வுகளைத்தேடியும், முடிவுகளைத்தேடியும் துரத்தினால் அது சூழ்நிலையை இன்றும் அதிகப்படுத்தும்.
கற்று வளருங்கள்
ஏமாற்றத்தை, தனிப்பட்ட மற்றும் உறவின் வளர்ச்சிக்கான வாய்ப்பாக பாருங்கள். அதில் இருந்து கற்றவற்றை புரிந்துகொண்டு, எதிர்காலத்தை ஒளிமயமாக்க அதை உபயோகியுங்கள்.
உண்மையான எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்
தெளிவான எல்லைகள், எதிர்பார்ப்புகள் என்பது உறவில் மிகவும் முக்கியம். அப்போதுதான் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும். எனவே உங்களின் தேவைகளை தெளிவான புரியவைத்து இருவரும் புரிந்துகொள்ளுங்கள்.
தெரபி
தேவைப்பட்டால், மன நல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கை சரியான வழியில் செல்வதற்கு வழிகாட்டுவார்கள். சிலருக்கு அதிகபட்சமாக சிகிச்சைகள் கூட தேவைப்படும். எனவே. அவை தேவைப்படும் பட்சத்தில் அதையும் எடுத்துக்கொள்ளுங்கள்.