புதுச்சேரி படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அவர் அந்த கோயிலில் வழிபடுவது போலவும், குளத்திற்கு செல்வது போன்ற காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்த நிலையில் ரஜினி கோயிலுக்கு வந்துள்ள தகவல் அறிந்ததும் ரசிகர்கள் அங்கே பெருமளவில் கூடினார்கள்.
கோயிலிலிருந்து வெளியே வந்த ரஜினி, திறந்த காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்.
அத்துடன் நடிகர் பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது பான் இந்தியா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கே ரஜினி படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.